பக்கவாதத்தின் பின்விைளவுகள்: சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்சனைகள்
- Article last reviewed 04 October 2024
- 18 mins read
பக்கவாதத்திற்குப் பிறகு சிறுநீர் மற்றும் மலம் கழிப்ப தில் பிரச்சனைகள அனுப்ப விப்ப துவழக்கமானது. இது பலருக்கு உணர்வுப்பூர்வ மான பிரச்சனையாக இருக்கலாம். மேலும் இது
அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கலாம்.
பக்கவாதத்திற்குப் பிறகு சிறுநீர் அல்லது மலம் கழிப்பதற்கான கட்டுப்பாட்டில் பிரச்சனை இருந்தால் உங்கள் பக்கவாதப் பராமரிப்பு குழுவுடன் பேசுங்கள். இவற்றை அடக்குவது தொடர்பான பிரச்சனைகளை நல்ல ஆலோசனை மற்றும் முன்னேற்பாட்டுடன் விவேகமாக நிர்வகிக்க முடியும்.
பக்கவாதத்திற்குப் பிறகு ஏன் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன?
பக்கவாதத்திற்குப் பிறகு பல்வேறு காரணங்களால் உங்களுக்கு சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதை அடக்குவதில் பிரச்சனைகள் உருவாகும்.
மைய நரம்பு மண்டலம் காரணம்பக்கவாதத்தினால் மூளையின் பாகங்கள் சேதமடைவது | மருந்துகள்சில மருந்துகள் சிறுநீர் அல்லது மலம் கழித்தல் கட்டுப்பாட்டைப் பாதிக்கலாம். | சிக்கல்கள்உங்களுக்கு சிறுநீர் நோய்த் தொற்றுகள் ஏற்படலாம், இவற்றால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கலாம். |
உடல்ரீதியான மாற்றங்கள்உடல் பலவீனம் மற்றும் உணர்விழப்பு உங்களின் நடமாட்டத் திறனை பாதிக்கலாம். நீங்கள் உரிய நேரத்தில் கழிப்பறைக்குச் செல்ல முடியாமல் போகலாம் அல்லது கட்டுப்படுத்துவதற்குச் சிரமப்படலாம். பக்கவாதத்திற்குப் பிறகு அறிவுத்திறன் மாற்றங்கள் மற்றும் பேச்சு சிரமம் ஆகியவை நீங்கள் உங்கள் கழிப்பறைத் தேவைகளை உங்களின் பராமரிப்பாளரிடம் தெரிவிப்பதற்கான உங்கள் திறனை பாதிக்கலாம். பக்கவாதத்திற்குப் பிறகு உள்விழுங்கும் பிரச்சினைகள் காரணமாக உங்களில் வழக்கமான உணவுமுறையில் மாற்றங்கள் ஏற்படும். இதனால், நீங்கள் குறைவாக சாப்பிடலாம் அல்லது குடிக்கலாம். நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து இல்லாமை ஆகியவற்றின் விளைவாக மலச்சிக்கல் ஏற்படலாம். | குறைந்த உடல்ரீதியான நடவடிக்கைகள்பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் உடற்குறைகளின் காரணமாக உங்களின் உடல்ரீதியான நடவடிக்கைகள் தற்காலிகமாகக் குறையலாம். இதனால், நீங்கள் மலச்சிக்கலை அனுபவிக்கலாம். |
என்னென்ன சிகிச்சைகள் கிடைக்கின்றன?
பக்கவாதத்திற்குப் பிறகு ஆரம்பக்கட்டப் பராமரிப்பு
உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல் தொடர்பான அட்டவனை தாதியாளர்கள் உங்களின் குடிக்கும் அளவு, சாப்பிடும் அளவு, சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் எண்ணிக்கையைப் பல நாட்களுக்குக் கண்காணிப்பார்கள். சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பையில் எஞ்சியிருக்கும் சிறுநீரை அளவிடுதல் உங்கள் சிறுநீர்ப்பையில் எஞ்சியிருக்கும் சிறுநீரின் அளவை மருத்துவர் அல்லது தாதியாளர் சிறுநீர்ப்பை ஸ்கேனர் அல்லது சிறுநீர் வடிகுழாயைப் (குழாய்) பயன்படுத்தி சரிபார்க்கலாம். அதிகளவில் சிறுநீர் எஞ்சியிருந்தால், அது சிறுநீரகப் பாதையில் அடைப்பை அல்லது சிறுநீர்ப்பை தசைகளில் பிரச்சனையைக் குறிக்கலாம். | |
சிறுநீர் பரிசோதனை சிறுநீர் நோய்த் தொற்று இருப்பதாகச் சந்தேகப்பட்டால், உங்கள் சிறுநீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்படலாம். | |
உங்களுக்கு சிறிது முதல் நடுத்தரமான உதவி தேவைப்பட்டால், தாதியாளர்கள் உங்கள் படுக்கைக்குப் பக்கத்தில் படுக்கை மலத்தட்டு / சிறுநீர்க் கலனை ஏற்பாடு செய்யலாம். அல்லது கழிவுக்கலன் (மலச்சாடி) நாற்காலி வழியாக உங்களைக் கழிப்பறைக்கு அழைத்துச் செல்லலாம். | |
உங்களுக்கு உடல் ரீதியான உதவி அதிகமாகத் தேவைப்பட்டால் அல்லது உங்களின் சிறுநீர் மற்றும் மலம் கழிப்புக் கட்டுப்பாட்டைத் திரும்பப் பெறுவது போதுமானதாக இல்லாவிட்டால், நீங்கள் அணிவதற்கு டயப்பர்கள் வழங்கப்படலாம். உங்கள் சிறுநீர்ப்பையை முழுவதுமாக காலியாக்க முடியாவிட்டால், சிறுநீரை ஒரு பையில் வெளியேற்ற ஒரு சிறுநீரக வடிகுழாய் செருகப்படலாம். இது செருகப்பட்டு குறுகிய காலத்திற்கு வைக்கப்படலாம் அல்லது உங்களுக்கு வசதியாக இருக்கவும், சிறுநீர் நோய்த் தொற்றின் அபாயத்தைக் குறைக்கவும் ஒரு நாளைக்குப் பலமுறை செய்யப்படலாம். |
சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதற்கான பயிற்சி, நோயறிகுறிகளை மேம்படுத்தலாம் மற்றும் அடக்குவதன் இயல்பான செயல்பாட்டு முறையை மீட்டெடுக்கலாம். சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதற்கான பயிற்சித் திட்டங்கள், வழக்கமாக தனிநபர்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன.
சிறுநீர்ப்பை பிரச்சனைகள்
சிறுநீர்ப்பை தொடர்பான பயிற்சி - உங்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய உந்துதல் ஏற்பட்ட பிறகு சிறிது நேரத்திற்குச் சிறுநீரை அடக்கி வைப்பதற்கான பயிற்சியாகும். இது அதிகச் சிறுநீரைத் தக்கவைக்கும் வகையில் சிறுநீர்ப்பையின் திறனை வலுப்படுத்துவதற்கும், கழிப்பறைக்குச் செல்லும் கால இடைவெளியை நீட்டிப்பதற்காகும். தேவைப்படும் போது கழிவறைக்குச் செல்வதற்குப் பதிலாக 2 முதல் 3 மணிநேரத்திற்கு ஒருமுறை கழிவறைக்குச் செல்ல திட்டமிடுங்கள். | |
இடுப்புத் தளப் பயிற்சிகள் இடுப்புத் தள தசைகளை வலுப்படுத்த உதவுகின்றன. இது சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதோடு சிறுநீர் கசிவையும் குறைக்கலாம். இதை எவ்வாறு செய்வது?
| |
சிறுநீரை அடக்க முடியாமைக்குச் சிகிச்சையளிக்க பல மருத்துவச் சாதனங்களும் அறுவைச்சிகிச்சை முறைகளும் உள்ளன. உங்கள் பக்கவாதப் பராமரிப்பு குழுவுடன் கலந்துரையாடுங்கள், தேவைப்பட்டால் நீங்கள் ஒரு நிபுணரிடம் பரிந்துரைக்கப்படுவீர்கள். | |
சிறுநீர் உற்பத்தி, அவசரம் மற்றும் கால இடைவெளி ஆகியவற்றைக் குறைக்க உதவுவதற்குச் சில மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். |
மலம் கழித்தல் பிரச்சனைகள்
கழிவறைக்குத் திட்டமிட்ட நேரத்தில் வழக்கமாகச் செல்ல வைப்பதன் மூலம் மலம் கழித்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்படலாம் (எ.கா., உணவு உண்ட பிறகு, இயற்கையான எதுக்களிப்பு மூலம் நகர்த்தப்படுவதற்கு மலக்குடல் தூண்டப்படும் போது). நீங்கள் கழிப்பறையை அடையும் வரை மலக்குடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கு மற்றும் தாமதப்படுத்துவதற்கான திறனை மேம்படுத்த இது உதவக்கூடும். | |
மலத்தை அடக்கமுடியாமைக்குச் சிகிச்சையளிக்க பல அறுவைச் சிகிச்சை முறைகள் உள்ளன. உங்கள் பக்கவாதப் பராமரிப்பு குழுவுடன் கலந்துரையாடுங்கள், தேவைப்பட்டால் நீங்கள் ஒரு நிபுணரிடம் பரிந்துரைக்கப்படுவீர்கள்.
| |
மலச்சிக்கலுக்குச் சிகிச்சையளிக்க மலமிளக்கி மருந்துகள் அல்லது மல மிருதுவாக்கிகள் பரிந்துரைக்கப்படலாம். |
எனது பராமரிப்பாளர் அல்லது குடும்பம் எனக்கு எவ்வாறு உதவலாம்?
கடுமையான பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு, முழுமையாக மீண்டெழுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும். இதுபோன்ற நிகழ்வுகளில், உங்கள் பக்கவாதப் பராமரிப்பு குழு உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பீடு செய்து பரிந்துரைக்கும் (எடுத்துக்காட்டாக, டயப்பர்கள், நிரந்தர அல்லது இடைவிட்ட சிறுநீர் வடிகுழாய்).
சிறுநீர்த் தொற்று மற்றும் சரும பாதிப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க நல்ல சுகாதாரம் மற்றும் தோல் பராமரிப்பு முக்கியம்.
அடக்குதல் தொடர்பான பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கான உதவிக்குறிப்புகள்
உங்கள் கவலைகள் குறித்து மருத்துவர் அல்லது தாதியாளரிடம் பேசுங்கள். அவர்கள் உங்களுக்குப் பொருத்தமான விருப்பத்தேர்வுகளை அறிவுறுத்தலாம். தேவைப்பட்டால் உங்களைச் சிறுநீர் மற்றும் மலத்தை அடக்குவது தொடர்பான நிபுணரிடம் பரிந்துரைக்கலாம். | |
| |
| |
|
Article available in English, Chinese, and Malay.
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
Contributed By
- An initiative by the Stroke Services Improvement Team in collaboration with all public healthcare institutions.
Related support and tools
Related Topics
Explore some of these related topics