பக்கவாதத்தின் ஆபத்தான காரணிங்களை கட்டுப்படுத்துதல் : சீரற்ற இதயத் துடிப்பு (ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன்)
- Article last reviewed 30 September 2024
- 12 mins read
சீரற்ற இதயத் துடிப்பு (ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் அல்லது AF) என்பது ஓர் பொதுவான சீரற்ற இதய தாளத்தின் வகையாகும் . சிங்கப்பூரில், 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களில் 1.5 சதவீதத்தினருக்கு சீரற்ற இதயத்துடிப்பு உள்ளது. சீரற்ற இதயத்துடிப்பினால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து, 55 வயதிற்குக் குறைவான நோயாளிகளிடத்தில் 0.1 சதவீதத்தில் இருந்து, 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நோயாளிகளிடத்தில் 10 சதவீதம் வரை அவர்களின் வயதுடன் அதிகரிக்கிறது. சீரற்ற இதயத்துடிப்பினால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை 5 மடங்காக அதிகரிக்கிறது.
சீரற்ற இதயத்துடிப்பு (Atrial Fibrillation, AF) என்பது என்ன?
இதயம் உடல் முழுவதும் இரத்தத்தைச் செலுத்துகிறது. வழக்கமான இதயச் செயல்பாட்டில், சீரான இரத்தவோட்டத்தை உறுதிசெய்வதற்கு, இதயத்தின் நான்கு அறைகளும் ஒருங்கிணைந்த வழியில் துடிக்கின்றன. எனினும், சீரற்ற இதயத்துடிப்பில் (AF) இந்த தாளம் பாதிக்கப்படுவதால், இதய அறைகள் சீரற்றும் அதிவேகமாகவும் துடிக்கின்றன.
சீரற்ற இதயத்துடிப்பு எவ்வாறு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது?
இதயம் சீரற்ற முறையில் துடிப்பதால் இதயத்தில் இரத்த உறைக்கட்டிகள் உருவாகும். இக்கட்டிகளின் பாகங்கள் வெளியேற்றப்பட்டு மூளையில் உள்ள இரத்த நாளத்தை முடுக்கும் வகையில் பயணிக்கின்றன. இதன் விளைவாக பக்கவாதம் ஏற்படுகிறது.
நோயடையாளங்கள் மற்றும் நோயறிகுறிகள் எவை?
சிலர் எந்த நோயறிகுறிகளையும் அனுபவிப்பதில்லை. மருத்துவப் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கும் வரை அவர்களின் சீரற்ற இதயத்துடிப்பு நிலை பற்றியும் தெரியாது. நோயறிகுறிகள் உள்ளவர்கள் பின்வருவரதை அனுபவிக்கலாம்:
- வேகமான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
- மூச்சுவிட இயலாத நிலை
- நெஞ்சு வலி அல்லது சோர்வு
- மயக்க உணர்வு அல்லது தலைச்சுற்றல்
சீரற்ற இதயத்துடிப்புக்கான ஊறுபாட்டுக் காரணங்கள் எவை?
சீரற்ற இதயத்துடிப்பின் பொதுவான ஊறுபாட்டுக் காரணிங்கள்:
• உயர் இரத்த அழுத்தம்
• குருதியோட்டக்குறை இதய நோய்
• இதய வால்வு குறைபாடுகள்
• இதயம் இரத்தத்தைப் பாய்ச்சும் செயல்பாட்டில் இயல்பு மாற்றங்கள்
• நோய்வாய்ப்பட்ட சைனஸ் நோய்க்குறி (ஒரு வகை இதய தாளக் கோளாறு)
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது?
எலக்ட்ரோகார்டியோகிராம் (ECG) அல்லது நீடித்த இதய தாளக் கண்காணிப்பைப் (eg. ஹோல்ட்டர்) பயன்படுத்தி உங்கள் இதயத்தின் மின் செயல்பாட்டைப் பதிவு செய்வதன் மூலம் சீரற்ற இதயத்துடிப்பு (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) பொதுவாக கண்டறியப்படுகிறது.
இதயத் துடிப்பு மற்றும்/அல்லது இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் நவீன தகவல்தொழில்நுட்ப சாதனங்கள், சீரற்ற இதயத்துடிப்பைத் துல்லியமாகக் கண்டறிய முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். ஆகையால், உங்களின் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
சீரற்ற இதயத்துடிப்புக்கு எவ்வாறு சிகிச்சைஅளிக்கப்படுகிறது?
சிகிச்சையின் நோக்கம் நோய் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் சிக்கல்களைத் தவிற்றவும் உதவும் தடுப்பதுமாகும்.
கீழ்க்கண்டவற்றின் மூலம் சீரற்ற இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்தலாம்:
- உங்கள் இதயத் தாளத்தை வழக்கமானதாக மாற்றுவதற்குச் சிகிச்சையளித்தல்
- உங்கள் இதயத் துடிப்பின் வேகத்தைக் குறைக்க சிகிச்சையளித்தல்
பக்கவாதத் தடுப்பு
சீரற்ற இதயத்துடிப்புக்கான சிகிச்சையைத் தவிர, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உங்களுக்குச் சிகிச்சைத் தேவைப்படலாம். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, இரத்தத்தைக் கரைக்கும் மருந்துகளைப் (உறைவெதிர்ப்பிகள்) பயன்படுத்துவது குறித்து உங்கள் மருத்துவர் ஆலோசிப்பார்.
உறைவெதிர்ப்பிகள்
சீரற்ற இதயத்துடிப்புக்குத் தொடர்புடைய பக்கவாதத்தைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான உறைவெதிர்ப்பிகளான வார்ஃபரின் மற்றும் நேரடி வாய்வழி உறைவெதிர்ப்பிகள் (எ.கா. ரிவாரோக்சபன், டபிகாட்ரான், அபிக்சபன் மற்றும் எடோக்ஸபன்) ஆகியவை பொதுவாக DOAC-கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
உறைவெதிர்ப்பிகளைப் பற்றி நான் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
மருந்து
- தினமும் உங்கள் மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள், மருந்தின் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
- நீங்கள் உறைவெதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் விரிவான ஆலோசனையைப் பெற வேண்டும்.
ஆலோசனைக்கு உங்கள் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களை அணுகவும்
- வைட்டமின்கள், ஆரோக்கியத் தயாரிப்புகள் மற்றும்/அல்லது பாரம்பரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு - ஏனென்றால் இவை உறைவெதிர்ப்பிகளின் விளைவுகளுடன் குறுக்கிடலாம்.
- எந்தவொரு பல்மருத்துவ அல்லது மருத்துவ நடைமுறைகளுக்கு முன்பு - இவை, ஏதேனும் இரத்தக்கசிவு சிக்கல்களைத் தடுக்க உறைவெதிர்ப்பிகளை நிறுத்த வேண்டியது அவசியமா என்பதைச் சரிபார்ப்பதற்காகும்.
இரத்தக்கசிவு அபாயத்தைக் குறைக்கவும்
உறைவெதிர்ப்பிகளை எடுத்துக்கொள்ளும் போது எளிதில் இரத்தம் கசிவு எற்படும். அதனால், காயம் அல்லது இரத்தக்கசிவு அபாயத்தை அதிகரிக்கும் நடத்தைகள் அல்லது செயல்பாடுகளைத் தவிர்க்கவும்.
மருத்துவ உதவியை நாடுங்கள்
- உங்களுக்குக் கட்டுப்படுத்த முடியாத இரத்தக்கசிவு இருந்தால், அல்லது
- நீங்கள் பின்வரும் இரத்தக்கசிவு அறிகுறிகளை அனுபவித்தால்:
- இடைவிடாத குமட்டல், வயிறு கோளாறு அல்லது, இரத்தமாக அல்லது காப்பி வடி நீர்போன்ற தோற்றமளிக்கின்ற வாந்தியை வாந்தியெடுத்தல்
- மாதவிடாய் காலங்களுக்கு இடையில் இரத்தக்கசிவு அல்லது அதிகப்படியான மாதவிடாய் சார்ந்த இரத்தக்கசிவு
- அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சிறுநீர் கழித்தல்
- இரத்தமாக அல்லது அடர் நிறத்தில் மலம் கழித்தல்
- காரணமில்லாத காயங்கள்
வேறு எப்படி பக்கவாதத்தைத் தடுக்கலாம்?
பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க நீங்கள் செய்யக்கூடிய பின்வரும் விஷயங்கள், இவை:
Article available in English, Chinese and, Malay.
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
Contributed By
- An initiative by the Stroke Services Improvement Team in collaboration with all public healthcare institutions.
Related support and tools
Related Topics
Explore some of these related topics