பக்கவாதத்தின் பின்விளைவுகள்: உணர்ச்சி சார்ந்த மாற்றங்கள்
- Article last reviewed 29 July 2024
- 14 mins read
உடல் ரீதியான மாற்றங்கள் தவிர, பக்கவாதம் ஒரு நபரின் மனநிலை, நடத்தை மற்றும் ஆளுமைத் திறனை பாதிக்கலாம். கோபம், எரிச்சல், மனக்கவலை மற்றும் சோகம் போன்ற உணர்வுகள் இதில் அடங்கலாம். சிலசமயங்களில், மூளை பாதிக்கப்பட்டுள்ள அளவைப் பொறுத்து, அக்கறையின்மை மற்றும் சிந்திக்காமல் செயல்படும் தன்மை ஆகியவற்றையும் அனுபவிக்கலாம்.
எனது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுதல்
பக்கவாதம் ஒவ்வொரு நபரின் நல்வாழ்வையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. பக்கவாதத்தின் சில பின்விளைவுகளில் உள்ளடங்குவன:
- உடல் தோற்றத்தில் மாற்றங்கள்
- உடல் அல்லது உடல் சார்ந்த செயல்பாடுகளின் இழப்பு
- சமூக நடவடிக்கைகளை தவிர்ப்பது
- வருவாய் இழப்பு
- குடும்பத்தில் பொறுப்பு மாற்றங்கள்
- தற்சார்பு இழப்பு
பக்கவாதத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் இழப்பு மற்றும் துக்கத்தை அனுபவிக்கலாம். துக்க நிலைகளின் ஒரு பகுதியாக நீங்கள் பலவிதமான உணர்ச்சிகளைக் கடந்து செல்லலாம். ("Five Stages of Grief (துக்கத்தின் ஐந்து நிலைகள்") - இது மனநல மருத்துவரான Kübler-Ross அவர்களால் உருவாக்கப்பட்டது). ஒவ்வொரு நிலையிலும் செலவிடும் நேரத்தின் அளவு நபருக்கு நபர் மாறுபடும். இந்த நிலைகளின் அளவு சமமானது அல்ல என்பதையும், ஒவ்வொருவரும் அவரவர் வழிகளில் துக்கப்படுகின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
துயரத்தின் நிலைகள்
- மறுப்பு
- கோபம்
- ஈடு செய்வதாகக் கூறுதல்
- மனச்சோர்வு
- ஏற்பு நிலை
பக்கவாதம் ஏற்பட்ட பிறகு நான் அனுபவிக்கக்கூடிய சில பொதுவான உணர்ச்சி சார்ந்த பதில்வினைகள் யாவை?
மனக்கவலை | பக்கவாதம் ஏற்பட்ட பிறகு நீங்கள் கவலை, பயம் அல்லது மன உளைச்சலை உணரலாம். நீங்கள் எதிர்காலத்தைப் பற்றியும் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கலாம். இந்த உணர்வுகளும் எண்ணங்களும் இயல்பானவை, மேலும் உங்கள் நிலை மேம்படும் போது உங்களால் இவற்றை கட்டுப்படுத்த இயலலாம். உடல் ரீதியாக, மனக்கவலை சிலநேரங்களில் பின்வருமாறு இருக்கலாம்:
இந்த உடல் சார்ந்த அறிகுறிகள் மிகவும் அதிகமாகி, உங்களை அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். |
விரக்தி மற்றும் கோபம் | நீங்கள் வழக்கமாக செய்வதை உங்களால் செய்ய முடியாமல் இருப்பதால் அல்லது மற்றவர்களை நம்பியிருக்க வேண்டியிருப்பதால் நீங்கள் விரக்தியாக உணரலாம். விரக்தியடைதல் என்பது ஒரு பொதுவான உணர்ச்சியாகும், இதை கிட்டத்தட்ட பக்கவாதத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர் அனைவரும் அனுபவிக்கலாம். உங்கள் மீட்புப் பயணத்தின் போது, நீங்கள் அவ்வப்போது இவ்வாறாக உணரலாம். உங்கள் விரக்தியையும் கோபத்தையும் உங்களுக்குள்ளே வைத்துக்கொள்வது உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மீட்புச் செயல்பாட்டில் முழுமையாக ஈடுபடுவதை கடினமாக்கும் எனவே இதைப் பற்றி யாரேனும் ஒருவரிடம் பேசுவது முக்கியமாகும். |
சோகம்/மனச்சோர்வு | சோகமாக உணர்வது பொதுவானதே, மேலும் இது பக்கவாதத்திற்குப் பிறகு ஏற்படும் ஒரு சாதாரண எதிர்வினையாக இருக்கலாம். உங்களின் சோக உணர்வுகளும், நம்பிக்கையின்மையும் நீடித்தால், அவை உங்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் உங்கள் திறனைப் பாதித்து உங்களை மனச்சோர்வு அடையச்செய்யலாம். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு எந்த நேரத்திலும் மனச்சோர்வு ஏற்படலாம். இது பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அல்லது பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஏற்படலாம். எவற்றைக் கவனமுடம் கவனிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதும், தொடக்கத்திலேயே மருத்துவ உதவியை நாடுவதும் முக்கியமாகும்.
மனச்சோர்வு வெவ்வேறு வழிகளில் மக்களைப் பாதிக்கிறது. சில பொதுவான அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
|
உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் | உங்கள் பக்கவாதத்தின் இயல்பைப் பொறுத்து, சிலநேரங்களில், உங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்கின்ற உங்கள் மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்படலாம். நீங்கள் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக உணர்ச்சிவசப்படலாம் அல்லது உங்கள் மனநிலை மிக விரைவாக மாறலாம். நிலையற்ற உணர்ச்சியின் சில அறிகுறிகளாவன,
|
பித்து மற்றும் பரவச நிலை | பித்து மற்றும் பரவச நிலையானது பக்கவாதத்தின் பொதுவான பின்விளைவு அல்ல, ஆனால் இது சிலரை பாதிக்கிறது. பித்து நிலையைக் கொண்டவர்களின் மனநிலை மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம். அவர்களின் மனநிலை மிகவும் ஏற்றமாக இருக்கும் போது, அவர்கள் அதிகயியக்கத்துடன் இருப்பதாகத் தோன்றலாம், மேலும் அவர்களுக்குத் தூங்குவதில் சிரமம் இருக்கலாம். பரவச உணர்வு கொண்டவர்கள் தொடர்ந்து எழுச்சியான மனநிலையைக் கொண்டிருப்பர்களாகத் தோன்றுவார்கள், மேலும் அவர்கள் மிகவும் நேர்மறையாக இருப்பதாத் தோன்றக் கூடும். |
இது சரியாகுமா?
பக்கவாதத்தை சமாளிப்பது உணர்ச்சி ரீதியாகத் திணறடிப்பதாக இருக்கும் அதே வேளையில், பெரும்பாலான உயிர் பிழைத்தவர்கள் காலப்போக்கில் சிறப்பாக உணர்கிறார்கள். இருப்பினும், சிலநேரங்களில், உணர்ச்சி மாற்றங்கள் நீடிக்கின்றன மற்றும் மோசமடையவும் செய்கின்றன.
நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உணரும் விதத்தைச் சமாளிக்க உதவுவதற்கு வளஆதாரங்கள் உள்ளன.
பக்கவாதத்தின் உணர்ச்சி சார்ந்த பின்விளைவுகளைச் சமாளிக்க எனக்கு எது உதவலாம்?
பிரச்சினைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து, மருந்து உதவியாக இருக்கலாம். மருந்து-அல்லாத பிற தீர்வுகும் உள்ளன. ஒரு உளவியலாளர் அல்லது மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படுவது தேவைப்படலாம்.
மருந்து
உங்கள் உணர்ச்சிகளை சமாளிக்க உதவும் சில மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் உங்கள் மூளையில் உள்ள இரசாயனங்களை பாதித்து உங்கள் மனநிலையை உயர்த்துகின்றன.
உளவியல் சிகிச்சை (மனநலச் சிகிச்சை)
மனநலச் சிகிச்சை என்பது தனிநபர் தங்களின் மனநலச் சிரமங்கள், உணர்ச்சி சார்ந்த சவால்கள் மற்றும் மன உளைச்சல் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகளைச் சமாளிக்க உதவும் பலவிதமான சிகிச்சைகளைக் குறிக்கிறது.
நீங்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கான ஒரு பாதுகாப்பான சூழலை மனநலச் சிகிச்சை வழங்குகிறது. நீங்கள் சிறப்பாக உணர்வதைத் தடுக்கின்ற உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு உங்கள் உளவியலாளர் உங்களுடன் இணைந்து பணியாற்றுவார். நீங்கள் தற்போது எதிர்கொள்கின்ற மற்றும் எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்களைச் சிறப்பாகச் சமாளிப்பதற்கான புதிய திறன்களையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள். உளவியலாளர் உங்களுடன் ஒருவருக்கு ஒருவர் என்ற முறையில் அல்லது உங்கள் துணைவர் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றலாம்.
Article available in English, Chinese, and Malay.
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
Contributed By
- An initiative by the Stroke Services Improvement Team in collaboration with all public healthcare institutions.
Related support and tools
Related Topics
Explore some of these related topics