எனது பராமரிப்பாளருக்காக: உங்களின் அன்புக்குரியவருக்குப் பராமரிப்பு வழங்குதல்
- Article last reviewed 27 February 2025
- 21 mins read
பக்கவாதத்தில் இருந்து மீள்வதற்குப் பராமரிப்பாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எனினும், பராமரிப்பாளர்கள் சிலநேரங்களில் மனதளவில் களைப்பாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணரலாம். உங்கள் சமூகத்தினர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கவனிப்பும் ஆதரவும் ஒரு பராமரிப்பாளராக உங்கள் புதிய பொறுப்புகளை நிறைவேற்றத் திட்டமிடுவதற்கு உங்களுக்கு உதவும்.
என்ன எதிர்பார்க்கலாம்
பக்கவாதத்தில் இருந்து உயிர் பிழைத்தவர், பராமரிப்பாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குப் பக்கவாத மீட்புச் செயல்முறை கடினமாகவும் குழப்பமாகவும் இருக்கலாம். பக்கவாதத்தில் இருந்து உயிர் பிழைத்தவரின் நடத்தை, நினைவாற்றல், தகவல்தொடர்பு, உணர்வு மற்றும் உடல் சார்ந்த திறன்கள் ஆகியவை பக்கவாதத்தால் எதிர்மறையாக பாதிக்கப்படலாம். பக்கவாதத்தில் இருந்து உயிர் பிழைத்தவரின் தேவைகளைப் பொறுத்து, பராமரிப்பாளர்கள் பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்களில் ஆதரவை வழங்க வேண்டியிருக்கலாம்:
ஆதரவு பெறுங்கள்
தகவல்களை அறிந்திருங்கள்
பக்கவாதத்தைப் பற்றியும் ஒரு பராமரிப்பாளரின் எதிர்பார்ப்புகளைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பீர்கள், மேலும் குறைவான மனப் பளுவைக் கொண்டிருப்பீர்கள்.
மேலும் தகவல்களுக்கு, உங்கள் சுகாதாரப் பராமரிப்பாளர்களுடன் இவற்றைப் பற்றி நீங்கள் பேசலாம்:
- பக்கவாதம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எவ்வாறு பாதிக்கிறது
- பக்கவாதச் சிகிச்சை மற்றும் அது மீண்டும் ஏற்படுவதற்கான அபாயத்தை எவ்வாறு குறைப்பது
- நலமடைவதற்கான செயல்முறை என்ன
- உங்களின் அன்புக்குரியவரைப் பராமரிப்பதற்கான வழிகள் மற்றும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்கள்
- மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு சுகாதாரப் பராமரிப்புக் குழுவுடன் தொடர்ந்து ஆலோசனை பெறுதல்
மற்றவர்களின் ஆதரவைப் பெறுதல்
புரிந்துகொள்கின்ற ஒருவரிடம் பேசுங்கள். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அணுகுதல்.
உங்கள் நல்வாழ்வுக்கு, நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும் போது இடை ஓய்வுப் பராமரிப்புச் சேவையைக் கண்டறியுங்கள். உங்களுக்கு உதவ மற்றொரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன் கலந்துரையாடலாம் மற்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். அது முடியாவிட்டால், இந்தச் சேவைகளைப் பற்றி அறிய நீங்கள் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (Agency of Integrated Care, AIC) வலைத்தளத்தைப் பார்க்கலாம்.
பின்வருவன போன்ற சமூக வளஆதாரங்களை நாடலாம் பக்கவாதத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கான பக்கவாத ஆதரவு குழுக்கள், பராமரிப்பாளர் பயிற்சி வகுப்புகள், குடும்பச் சேவை நிலையங்கள்
உங்களுக்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்
உங்களுக்காகவும், உங்கள் அன்புக்குரியவருக்காகவும் ஆதரவைப் பெறுவது, உங்களுக்கும் உங்கள் பராமரிப்பாருக்கும் அவசியமாகும், மேலும் அது உங்கள் இருவருக்குமே பயனளிக்கும். சுய-பராமரிப்புக்கான சில பரிந்துரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- சமச்சீரான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்
- தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
- ஒரு பொழுதுபோக்கிற்கான நேரத்தை அல்லது நீங்கள் தொடர்ந்து அனுபவிக்கும் வகையிலான ஒரு நடவடிக்கையைக் கண்டறியுங்கள்
- உங்களின் பிற நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் நேரம் செலவிடுங்கள்
- நாட்குறிப்பு எழுதத் தொடங்குங்கள். நாட்குறிப்பு எழுவது மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைக்கவும், உங்களுக்காக நேரம் செலவிடவும் உங்களுக்கு உதவலாம்.
கடினமான உணர்ச்சிகளை நிர்வகித்தல்
பராமரிப்பு வழங்கல் பயணத்தின் போது மன அழுத்தத்தை அனுபவிப்பது மற்றும் இழப்பு உணர்வை உணருவது பொதுவானது. இவற்றை நிர்வகிக்க உதவ, நீங்கள்:
- பக்கவாத மீட்பு மற்றும் மாற்றங்களுக்காக உங்களைச் சரிசெய்துகொள்வதற்குச் சிறிது காலம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
- உங்கள் அன்புக்குரியவரின் தேவைகள் மற்றும் மீட்புச் செயல்முறைகளைப் புரிந்து கொள்ளுங்கள்
- உங்கள் முன்னுரிமைகளைத் திட்டமிட்டு ஒரு வழக்கத்தைப் பராமரியுங்கள்
- இவை அனைத்தையும் நீங்களே செய்ய வேண்டியதில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்
- குறிப்பிட்ட வழிகளில் உங்களுக்கு உதவுமாறு குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கேளுங்கள்
எப்போது உதவி பெற வேண்டும் என்பதை அறிவது
சில பராமரிப்பாளர்கள் மனச்சோர்வை அனுபவிக்கலாம். மனச்சோர்வு ஒருவரின் ஆரோக்கியத்தைப் பாதித்து, பிற உடல்நலக் குறைவுகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
மனச்சோர்வின் சில அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
- சோகமாக, மனக் கவலையாக அல்லது “வெறுமையாக” உணர்தல்
- நம்பிக்கை இழந்தவராக உணர்தல்
- குற்றம் செய்தவராக, பயனற்றவராக, உதவியற்றவராக உணர்தல்
- பொழுதுபோக்குகள் மற்றும் பிற நடவடிக்கைகளில் ஆர்வமின்மை அல்லது மகிழ்ச்சியின்மை
- ஆற்றலின்றி இருப்பது, எப்போதும் சோர்வாக இருப்பது, “மந்தமாக இருப்பதாக” உணர்வது
- அமைதியற்று இருப்பதாகவும், எப்போதும் எரிச்சலாகவும் உணர்தல்
- மரணம் அல்லது தற்கொலை எண்ணங்கள், அல்லது தற்கொலை முயற்சிகள்
- பசியின்மை, உடல் எடை இழப்பு அல்லது உடல் எடை அதிகரிப்பு
- கவனம் செலுத்தவோ, விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளவோ அல்லது முடிவுகளை எடுக்கவோ முடியாமை
- அளவுக்கு அதிகமாக தூங்குவது அல்லது தூங்க முடியாமல் இருப்பது
இந்த அறிகுறிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவை இரண்டு வாரங்களுக்கும் மேல் நீடித்தால், மருத்துவர், மனநல மருத்துவர் அல்லது உளவியலாளரிடமிருந்து தொழில்முறையிலான உதவியை நாட வேண்டும்.
பராமரிப்பாளருக்கான பயிற்சி வகுப்புகள்
மருத்துமனையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன், நீங்கள் ஆலோசனையைப் பெறுவீர்கள், சில சந்தர்ப்பங்களில், உங்கள் அன்புக்குரியவரின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவமனையில் பயிற்சி பெறுவீர்கள். மூச்சு-உணவுக் குழாய் வழியாக உணவளித்தல், சரியான உடல் நிலைப்பாடு மற்றும் இடமாற்ற நுட்பங்கள் போன்ற குறிப்பிட்ட திறன்களைப் பற்றி உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படலாம்.
மருத்துமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, நீங்கள் நிலைமாறுவதற்கும், உங்கள் அன்புக்குரியவர்களைப் பராமரிக்க இயலுவதற்கும் உதவ சமூகத்தில் சேவைகள் கிடைக்கின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகளில் சில அடிப்படைத் தாதிமைத் திறன்கள், அடிப்படை இல்லப் பராமரிப்பு திறன்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான பக்கவாத மேலாண்மை ஆகியவை அடங்கும். மேலும் தகவல்களுக்கு, உங்களுக்கு அருகாமையில் உள்ள ஏதேனும் AICare லிங்க்கை அணுகலாம் அல்லது சில்வர் பேஜஸ் வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
மேலும் தகவல்களுக்கு
AICare Link (i-Care Link என உச்சரிக்கப்படுகிறது) பராமரிப்பாளர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் சரியான இடத்தில் சரியான கவனிப்பைப் பெறுவது குறித்து ஆலோசனை வழங்குகிறது, மேலும் மூத்தோர்கள் வாழ்விடத்திலேயே சீராக மூப்படைய இயலச் செய்கிறது. முதன்மையான ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (AIC) அலுவலகம் மேக்ஸ்வெல்லில் (அமோய் உணவு நிலையத்திற்கு மேலே) அமைந்துள்ளது. | |
வலைத்தளம்: https://www.aic.sg/ மின்னஞ்சல்: enquiries@aic.sg நேரடித் தொலைபேசி எண்: 1800 650 6060 | |
Singapore National Stroke Association (SNSA) என்பது சிங்கப்பூர் தேசிய பக்கவாதக் கழகம் ஆகும். பக்கவாதத்திலிரூந்து மீண்டவர்களுக்கும் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் முழுமையான ஆதரவு, கல்வி மற்றும் வளங்களை வழங்குவதன் மூலம் அவர்களைப் பலப்படுத்த முயற்சிக்கும் ஓர் இலாப நோக்கமில்லாத அமைப்பாகும். பக்கவாதத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு வாழ்நாள் உதவிக்கரம் நீட்டும் அமைப்பாகச் செயல்படுகிறது. அவர்களது புனர்வாழ்வு பயணத்தின் போது நடைமுறை உதவி, சமூக மனநலத்தைச் சமாளிக்கும் ஆதரவு மற்றும் சமூக உணர்வை வழங்குகிறது. இக்கழகம் பக்கவாதத் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு குறித்த விழிப்புணர்வை விரிவாக்கி, முக்கியமான மனநல பயிற்சித் திட்டங்களை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இடையே தொடர்புகளை ஊக்குவிக்கின்றது. இத்தகைய முயற்சிகள் மூலம் இக்கழகம் பக்கவாதத்திலிருந்து மீண்டவர்களின் வாழ்வு தரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தனிமையில் சமூதாய இணைப்பிற்கு எவ்வித சவால்களை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கும் உதவுகிறது. | |
வலைத்தளம்: http://www.snsasg.org/ மின்னஞ்சல்: contact@snsa.org.sg நேரடித் தொலைபேசி எண்: +65 8125 1446 | |
S3 என்பது 2015ல் நிறுவப்பட்ட சிங்கப்பூரின் முதல் - பக்க வாதத்தை முதன்மை கருத்தில் க ொண்டு இயங்கும் சமூக மறுவாழ்வு மை யம் மற்றும் ஆர ோக்கிய நிறுவனம் ஆகும் . சிங்கப்பூரில் உள்ள பக்கவாதத் தால் பாதிக்க பட்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களின் தே வை களை கருத்தில் க ொண்டு அதை நிவர்த்தி செ ய்வதே இந்நிறுவனத்தின் குறிக்க ோள் ஆகும். S3யுடன், புனர் வாழ்வின் வாயிலாக பக்கவாதத்தால் இருந்து குணம் அடை ந்தவர்களுக்கு த ொடர்ச்சியாக பராமரிப்பு கிடை ப்பது சாத்தியம் ஆகிறது. இந்த மறுவாழ்வு, மே ம்பட்ட மறுவாழ்வு த ொழில் நுட்பங்கள் மற்றும் மரபுமுறை சிகிச்சை கள் அது மட்டும் அல்லாமல் எங்களது தனித் துவமான - அறிவாற்றலை யும் சமூக உளவியல் வளர்ச்சியை யும் மனதில் க ொண்டு செ யல்படும் S3 ஆர ோக்கிய திட்டத்தின் உதவியுடன் செ யலாற்றி அதிகபட்ச மீட்பு திறன், தனித்து செ யல் படுதல், மற்றும் மறு ஒருங்கிணை ப்புக்கு வழிவகுக்கிறது. S3 நிறுவனம் த ொடர்ச்சியாக கூட்டு நிறுவனங்களின் உதவியுடன், பக்க வாதத்தில் இருந்து விடு பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள்,த ொண்டர்கள்,பங்குதாரர்கள் ஒன்று சே ர்த்து பக்க வாதம் தடுப்பு குறித்த விழிப்புணர்வை நமது பரந்த சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது. | |
வலைத்தளம்: http://www.s3.org.sg/ மின்னஞ்சல்: info@s3.org.sg நேரடித் தொலைபேசி எண்: +65 64733500 | |
குடும்பச் சேவை நிலையங்கள் (FSC)
| குடும்பச் சேவை நிலையங்கள் (FSC-கள்) ஒரு முக்கிய சமூக அடிப்படையிலான மையப் புள்ளியாகவும், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கான சமூக சேவை வழங்குநராகவும் விளங்குகின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் சமூக நல்வாழ்வை ஊக்குவிப்பதும் மேம்படுத்துவதுமே FSCகளின் நோக்கங்களாகும். சமூகப் பணியாளர்கள் மற்றும் பிற தொழில் நிபுணர்களால் FSC-இல் பணியாற்றுகின்றன, இவர்களால் உதவி வழங்க முடியும். |
வலைத்தளம்: https://www.msf.gov.sg/docs/default-source/default-document-library/list-of-fscs-in-operation.pdf | |
ஸ்ட்ரோக்ஹப் | ஸ்ட்ரோக்ஹப் என்பது பக்கவாதத்தால் உயிர் பிழைத்தவர்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான வளஆதார வழிகாட்டியாகும். இது பக்கவாதம் தொடர்பான விவரங்கள் மற்றும் பக்கவாதத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கை ஆகியவை பற்றிய தகவல்களை வழங்குகிறது. பக்கவாதம் குறித்த தகவல் சிற்றேடுகள் மற்றும் விபரத் தாள்கள் நீங்கள் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கின்றன. |
வலைத்தளம்: https://www.healthhub.sg/programmes/strokehub |
Article available in English, Chinese, and Malay.
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
Contributed By
- An initiative by the Stroke Services Improvement Team in collaboration with all public healthcare institutions.
Related support and tools
Related Topics
Explore some of these related topics