பக்கவாதம் ஏற்பட்ட பிறகு அறிவுத்திறனில் சிரமங்கள் ஏற்படலாம். இது உங்கள் அன்றாட நடைமுறைகள், நீங்கள் சிந்திக்கும் விதம் மற்றும் முடிவெடுக்கும் விதம் ஆகியவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது சவாலானதாகத் தோன்றினாலும், உங்கள் அறிவுத்திறன் சிரமங்களை மேம்படுத்தவும் சமாளிக்கவும் உங்களுக்கு உதவும் வழிகள் உள்ளன.
எனது நினைவகத்தை மேம்படுத்த நான் என்ன செய்யலாம்?
மனப் பயிற்சிகள் மன விழிப்புணர்வையும் கவனத்தையும் மீண்டும் உருவாக்க உதவக்கூடும். உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கக்கூடிய சில செயல்பாடுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
எதையேனும் புதிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்
ஒரு புதிய மொழியை அல்லது ஒரு இசைக் கருவியைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு தலைப்பில் ஒரு புத்தகத்தைப் படியுங்கள்.
புதிய பொழுதுபோக்கை மேற்கொள்ளுங்கள்
இது எந்தளவிற்கு சவாலானதாக இருக்கிறதோ, இது அந்தளவிற்கு உங்கள் மூளைக்கு நன்மை தரும்.
சிந்தனையைத் தூண்டும் விளையாட்டுக்களை விளையாடி மகிழுங்கள்
நீங்கள் தந்திரமாக செயல்பட வேண்டிய அல்லது சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய விளையாட்டுகளை விளையாடுங்கள் அல்லது செயல்பாடுகளில் பங்கேற்றிடுங்கள்.
உதாரணம்: குறுக்கெழுத்து புதிர், மஹ்ஜோங் மற்றும் சுடோகு.
அறிவாற்றல் சிரமங்களைச் சமாளிக்க நான் என்ன செய்யலாம்?
உங்களுக்கு நீங்களே பொறுமையாக இருங்கள், மேலும் வேலைகளைச் செய்து முடிக்க உங்களுக்கு அதிக நேரம் கொடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்வதன் மூலம் உங்கள் வேலைகளை எளிதாக்கிக் கொள்ளுங்கள்.
விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் நாட்குறிப்பு அல்லது நினைவூட்டல் உதவி கருவியில் விஷயங்களை எழுதுங்கள்.
பொருட்களைத் தொலைப்பதை நிறுத்த ஒரே இடத்தில் பொருட்களை வைக்க முயற்சித்திடுங்கள்.
சுற்றியுள்ள கவனச்சிதறல்களை அகற்றிவிடுங்கள்.
துடிப்புடன் இருப்பது அறிவுத்திறனை மேம்படுத்த வாய்ப்பை வழங்குகிறது
இடையில் இடைவெளிகள்விட்டு உங்கள் செயல்பாடுகளைத் திட்டமிடுங்கள்.
உங்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்யுங்கள். அதிக சோர்வாக இருப்பது மோசமான செறிவுக்கு பங்களிக்கும்.
உங்கள் மனதை நிதானப்படுத்தவும் அமைதிப்படுத்தவும் வழிகளைக் கண்டறியுங்கள். சிலர் இசையைக் கேட்பது அல்லது தியானம் செய்வதை விரும்பலாம்.
ஆதரவு பெற சிங்கப்பூர் தேசியப் பக்கவாதச் சங்கம் (SNSA) அல்லது பக்கவாத ஆதரவு நிலையம் (S3) போன்ற சமூக ஆதாரவளங்கள் குறித்து கண்டறியுங்கள்.
ஒரு பராமரிப்பாளராக அல்லது குடும்பமாக என்னால் எப்படி உதவ முடியும்?
அமைதியாக இருங்கள். பக்கவாதத்திலிருந்து பிழைத்தவரை அவருடைய வேகத்தில் வேலைகளைச் செய்ய அனுமதித்திடுங்கள்.
பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர் கவனிக்கவும் விஷயங்களை நினைவு வைத்து கொள்ளவும் சிரமப்படக்கூடும் என்பதால் விஷயங்களை மிகவும் சிக்கலாக்குவதைத் தவிர்த்திடுங்கள். வேலைகளைத் தனிப்பட்ட படிகளாகப் பிரித்து கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
ஒன்றின் பின் ஒன்றாக, எளிய அறிவுறுத்தல்களைக் வழங்குங்கள்.
ஒன்றாகப் பயிற்சி செய்வதன் மூலம் ஊக்கப்படுத்துங்கள்.
உங்கள் குடும்ப உறுப்பினருக்காக எல்லாவற்றையும் செய்வதைத் தவிர்த்திடுங்கள்.
உங்கள் குடும்ப உறுப்பினருக்கு சில அறிவுத்திறன் சிக்கல்கள் இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், சுகாதார நிபுணர்களிடம் ஆரம்பகால உதவியைக் கோருங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
அறிவுத்திறன் சிக்கல்கள் இருக்கிறது என்றால் எனக்கு முதுமை மறதிநோய் இருக்கிறது என்று அர்த்தமா?
பக்கவாதத்திலிருந்து பிழைத்தவருக்கு அறிவுத்திறன் சிரமங்கள் இருக்கலாம், ஆனால் அந்த நபருக்கு முதுமை மறதிநோய் இருக்கிறது என்று அர்த்தமல்ல. பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர் தனது நிதிகளைக் கையாளுதல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்தல் போன்ற தினசரி செயல்பாடுகளை சுதந்திரமாகச் செய்வதற்கான திறனை பாதிக்கும் அளவிற்கு அவரது அறிவுத்திறன் சிரமங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே அவருக்கு முதுமை மறதிநோய் இருப்பதாகக் கருதப்படும். இதன் விளைவாக, அவர்கள் இனிமேல் இந்தச் செயல்களைச் செய்ய மாட்டார்கள் அல்லது அவர்களின் அறிவுத்திறன் சிரமங்கள் காரணமாக இந்தச் செயல்பாடுகளைச் செய்ய அவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும்.
அறிவுத்திறன் குறைபாட்டைக் கொண்டிருந்தால், எனது தனிப்பட்ட நலனைப் பற்றி முடிவெடுக்கும் மனத் திறன் எனக்கு இல்லையா?
அறிவுத்திறன் சிரமங்களைக் கொண்ட பக்கவாதத்திலிருந்து பிழைத்தவருக்கு இன்னும் மனத் திறன் இருக்கலாம். இருப்பினும், அவரால் அவரின் நிதிப் பொறுப்புகளைத் தக்க வைத்துக் கொள்ளவோ அல்லது அவரின் தனிப்பட்ட நலனைப் பற்றி முடிவுகளை எடுக்கவோ முடியாவிட்டால், அவருக்கு மனத் திறன் இல்லாமல் போகலாம்.
நீண்டகால அதிகாரப் பத்திரம் (LPA) என்பது ஒரு சட்ட ஆவணமாகும், இது உங்கள் தனிப்பட்ட நலனைப் பற்றி முக்கியமான முடிவுகளை இனி உங்களால் எடுக்க முடியாது என்கிற நிலையில் முக்கியமான முடிவுகளை எடுக்க ஒரு நபரை நியமிக்கிறது. முன்கூட்டிய வழிகாட்டுதல்கள் (உயிருடன் இருக்கும் போதே உயில் எழுதி வைப்பது போன்றவை) என்பவை உங்கள் விருப்பங்களை நீங்கள் தெரிவிக்க முடியாவிட்டால் அவற்றை வரையறுத்துக் காட்டும் சட்ட ஆவணங்களும் ஆகும்.
Singapore National Stroke Association (SNSA) என்பது சிங்கப்பூர் தேசிய பக்கவாதக் கழகம் ஆகும். பக்கவாதத்திலிரூந்து மீண்டவர்களுக்கும் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கும் முழுமையான ஆதரவு, கல்வி மற்றும் வளங்களை வழங்குவதன் மூலம் அவர்களைப் பலப்படுத்த முயற்சிக்கும் ஓர் இலாப நோக்கமில்லாத அமைப்பாகும். பக்கவாதத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு ஒரு வாழ்நாள் உதவிக்கரம் நீட்டும் அமைப்பாகச் செயல்படுகிறது. அவர்களது புனர்வாழ்வு பயணத்தின் போது நடைமுறை உதவி, சமூக மனநலத்தைச் சமாளிக்கும் ஆதரவு மற்றும் சமூக உணர்வை வழங்குகிறது. இக்கழகம் பக்கவாதத் தடுப்பு மற்றும் புனர்வாழ்வு குறித்த விழிப்புணர்வை விரிவாக்கி, முக்கியமான மனநல பயிற்சித் திட்டங்களை ஏற்படுத்தி, பாதிக்கப்பட்டவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இடையே தொடர்புகளை ஊக்குவிக்கின்றது. இத்தகைய முயற்சிகள் மூலம் இக்கழகம் பக்கவாதத்திலிருந்து மீண்டவர்களின் வாழ்வு தரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், தனிமையில் சமூதாய இணைப்பிற்கு எவ்வித சவால்களை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கும் உதவுகிறது.
S3 என்பது 2015ல் நிறுவப்பட்ட சிங்கப்பூரின் முதல் - பக்க வாதத்தை முதன்மை கருத்தில் கொண்டு இயங்கும் சமூக மறுவாழ்வு மை யம் மற்றும் ஆரோக்கிய நிறுவனம் ஆகும். சிங்கப்பூரில் உள்ள பக்கவாதத் தால் பாதிக்க பட்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களின் தே வை களை கருத்தில் கொண்டு அதை நிவர்த்தி செ ய்வதே இந்நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும். S3யுடன், புனர் வாழ்வின் வாயிலாக பக்கவாதத்தால் இருந்து குணம் அடை ந்தவர்களுக்கு தொடர்ச்சியாக பராமரிப்பு கிடை ப்பது சாத்தியம் ஆகிறது. இந்த மறுவாழ்வு, மே ம்பட்ட மறுவாழ்வு தொழில் நுட்பங்கள் மற்றும் மரபுமுறை சிகிச்சை கள் அது மட்டும் அல்லாமல் எங்களது தனித் துவமான - அறிவாற்றலை யும் சமூக உளவியல் வளர்ச்சியை யும் மனதில் கொண்டு செ யல்படும் S3 ஆரோக்கிய திட்டத்தின் உதவியுடன் செ யலாற்றி அதிகபட்ச மீட்பு திறன், தனித்து செ யல் படுதல், மற்றும் மறு ஒருங்கிணை ப்புக்கு வழிவகுக்கிறது.
S3 நிறுவனம் தொடர்ச்சியாக கூட்டு நிறுவனங்களின் உதவியுடன், பக்க வாதத்தில் இருந்து விடு பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள்,தொண்டர்கள்,பங்குதாரர்கள் ஒன்று சே ர்த்து பக்க வாதம் தடுப்பு குறித்த விழிப்புணர்வை நமது பரந்த சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
டிமென்ஷியா சிங்கப்பூர் 1990-இல் அல்சைமர் நோய் சங்கமாக உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் வளர்ந்து வரும் டிமென்ஷியா சமூகத்திற்குச் சிறப்பாகச் சேவை செய்யவும், டிமென்ஷியா பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், மற்றும் மக்களிடையே அந்நிலைமையைச் சுற்றியுள்ள களங்கத்தைக் குறைக்கவும் இது தொடங்கப்பட்டது.
சிறந்த டிமென்ஷியா பராமரிப்பில் சிங்கப்பூரின் முன்னணி சமூக சேவை நிறுவனமாக இருக்கும் டிமென்ஷியா சிங்கப்பூர், டிமென்ஷியாவுடன் வாழும் மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தேவைகளுக்காகப் பரிந்து பேசுவது; டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் பரிவும் புரிந்துணரும் திறன்களை உருவாக்குவது; டிமென்ஷியாவைப் பற்றிய பகுத்தறிவு மற்றும் ஆலோசனை மூலம் சமூகத்தை மேம்படுத்துவது; மற்றும் தரம் வாய்ந்த நபர்களை மையமாகக் கொண்ட பரிவுமிக்க பராமரிப்பு புத்தாகத்தை வழங்குவது, ஆகியவையே இதன் நோக்கங்களாகும்.
இளையத்தைம் : www.dementia.org.sg
நேரடித்தொலைபேசிஎண்: +65 6377 0700
முகவரி: 20 வபண்டிமியர் தராடு, #01-02 BS வபண்டிமியர் வசன்டர், சிங்கப்பூர் 339914
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
Contributed By
An initiative by the Stroke Services Improvement Team in collaboration with all public healthcare institutions.
The Recommended Dietary Allowances (RDA) refer to the recommended daily levels of nutrients to meet the needs of nearly all healthy individuals in a particular age and gender group
If you're not already aware of your daily calorie intake, it’s time to start! Consuming more than you need will lead to weight gain. The recommended daily calorie intake for men and women are different.