பக்கவாதத்தின் பின்விளைவுகள்: உணர்ச்சி சார்ந்த மாற்றங்களைச் சமாளித்தல்

Coping with emotional changes after stroke 

 

பக்கவாதம் திடீரென ஏற்படலாம். திடீர் உடல்நல சிரமங்களில் இருப்பதைப் போலவே, பக்கவாதத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களும் அவர்களது குடும்பங்களும் குறிப்பிடத்தக்க உணர்ச்சி சார்ந்த பதில்வினைகளை அனுபவிக்கலாம். அதிர்ச்சியைத் தவிர, அவர்கள் தன்னிலை இழப்பு, குழப்பம், கோபம், குற்ற உணர்வு மற்றும் ஏமாற்றம் போன்றவற்றை உணரலாம். பெரும்பாலான நேரங்களில், பக்கவாதத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் முன்பு இருந்த அதே நபராகத் தன்னை உணர முடியாததால் துக்கமடைகிறார்கள். உடல் மற்றும் அறிவுத்திறன் சார்ந்த மாற்றங்களைக் கையாள்வது அவர்களுக்கு உணர்ச்சி ரீதியாகச் சவாலாக அமையலாம். இந்த மாற்றங்களைச் சமாளிப்பதற்கான சில உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நான் உணரும் விதம் தொடர்பாக நான் என்ன செய்யலாம்?

Coping Emotions P1.1.png
ஆதரவை நாடுங்கள்

தன்னிலை இழப்பதும், குழப்பமடைவதும் இயல்பானதே. நீங்கள் உணர்கின்ற உணர்ச்சிகளின் வரம்பை உணர உங்களுக்கு நீங்களே கால அவகாசத்தையும் இடைவெளியையும் வழங்கிக் கொள்ளுங்கள். பக்கவாதத்திற்குப்பின் சரியான அல்லது தவறான உணர்ச்சி சார்ந்த பதில்வினை என்று எதுவுமில்லை.  உணர்வுகளை சமாளிப்பது சிரமமாக இருந்தால், உங்கள் மருத்துவருடன் பேசுங்கள்.  உங்களுக்குப் பொருத்தமான வளஆதாரங்களை அவர் பரிந்துரைப்பார்.

 

Coping Emotions P1.2.png
யாரேனும் ஒருவருடன் தொடர்பில் இருங்கள்

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி யாரேனும் ஒருவரிடம் பகிர்ந்து கொள்வது , நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கே  உணர்த்த உதவலாம். யாரேனும் ஒருவரிடம் பேசுவது உங்களின் தனிமை உணர்வைக் குறைக்கலாம். மேலும் அவர் உங்களுக்கு உதவிக்குறிப்புகளையும் உத்திகளையும் வழங்கி உதவலாம். பக்கவாதத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுடன் தொடர்பில் இருப்பது அத்தகைய ஒரு வழியாகும். நீங்கள் சிங்கப்பூர் தேசியப் பக்கவாதச் சங்கம் (SNSA) அல்லது பக்கவாத ஆதரவு நிலையம் (S3) போன்ற சமூக ஆதாரவளங்களை அணுகி ஆதரவு பெறலாம்.  

 

Coping Emotions P1.3.png
அடைய முடிகின்ற இலக்குகளை அமைத்திடுங்கள்

இந்த நிலையில் இருந்து மீளும் வேகம் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. உங்கள் உடல் கூறுவதைக் கேளுங்கள். உங்களின் மறுவாழ்வுச் சிகிச்சையாளர்களுடன் தொடர்பில் இருங்கள், அடைய முடிகின்ற இலக்குகளை அமைத்திடுங்கள். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டுமே கவனம் செலுத்துங்கள், உங்கள் உடல் "புதிய நடைமுறை வாழ்க்கைக்கு" பொருந்திக் கொள்ள அவகாசம் அளியுங்கள்.

 

Coping Emotions P2.png
உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்

நீங்கள் அர்த்தமுள்ளதாகக் கருதும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உங்கள் மனநிலையைத் தணிக்க உதவலாம். அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது மற்றும் நீங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்வது ஆகியவை இதில் அடங்கும். நீங்கள் உடனடியாக சில நடவடிக்கைகளுக்குத் திரும்ப முடியாமல் போகலாம் என்பதையும், உங்களால் இன்னும் பல வழிகளில் அவற்றை மேற்கொள்ள முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்ன வகையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதை ஆராய்ந்தறிய உங்கள் மறுவாழ்வுச் சிகிச்சையாளர்களிடம் பேசுங்கள்!

 

Coping Emotions P2.1.png
இளைப்பாறல் அல்லது மனத்தெளிவு நிலையைப் பயிற்சி செய்யுங்கள்

உடலை அமைதிப்படுத்தவும் மனதை மையப்படுத்தவும் சுவாசம் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இளைப்பாறல் நுட்பங்களையும், மனத்தெளிவு நிலையையும் பயிற்சி செய்வது, உங்களின் அன்றாட மன உளைச்சல் அல்லது மனக்கவலையை சமாளிக்க உதவலாம்.

 

Coping Emotions P2.2.png
உங்களுக்கு நீங்களே நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்

உங்களை நீங்களே கொண்டாடுங்கள்! நீங்கள் மிகப் பெரிய வாழ்க்கைச் சவாலை கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவரை சமாளித்தற்கு அவ்வப்போது உங்களை நீங்களே மகிழ்வித்துக் கொள்ளுங்கள். ஒரு பரிசு அல்லது நீங்கள் மகிழ்ச்சியுடன் மேற்கொள்கின்ற நடவடிக்கை மூலம் உங்களுக்கு நீங்களே வெகுமதி அளித்துக் கொள்ளுங்கள்.

பக்கவாதத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு பராமரிப்பாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எவ்வாறு உதவலாம்?

 

Coping Emotions P2.3.png
பொறுமையாக இருங்கள், ஒருவருக்கொருவர் பேசுங்கள்

நீங்கள் கேட்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். பெரும்பாலும், நீங்கள் அவர்களுடன் அவர்களுக்காக இருப்பதே போதுமானதாகும்.

 

Coping Emotions P3.png
அவர்கள் தன்னியக்கத்தைப் பெற உதவுங்கள்

தனது சுயசார்பை இழப்பது தான், பக்கவாதத்தில் இருந்து தப்பிப் பிழைத்த ஒருவர் எதிர்கொள்ளும் கடினமான சவால்களில் ஒன்றாகும். அன்புக்குரியவர்களாக, பக்கவாதத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு உங்களால் முடிந்தவரை உதவ விரும்புவது இயல்பானதே. உங்கள் குடும்ப உறுப்பினருக்காக எல்லாவற்றையும் செய்வதை விட, அவர்கள் செய்யும் விஷயங்களில் அவர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்வதற்கும் முயற்சி செய்யுங்கள். தங்களுக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்தாலும்,  இன்னும் தங்களது தேவைகள் சிலவற்றைத் தாங்களாகவே பூர்த்தி செய்துகொள்ளும் திறனைக் கொண்டிருப்பதாக அவர்கள் உணர்வதற்கு இது உதவும். இது அவர்களின் சுயமரியாதை, மனநிலை மற்றும் அவர்களின் மீட்பு பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. மேலும் அறிய உங்கள் மறுவாழ்வுச் சிகிச்சையாளர்களிடம் பேசுங்கள்.

 

Coping Emotions P3.1.png
அவர்கள் செயலூக்கத்துடன் இருக்க உதவுங்கள்

செயலூக்கத்துடன் இருப்பது உங்கள் அன்புக்குரியவரின் மனநிலையை மேம்படுத்த உதவலாம். செயல்களை ஒன்றிணைந்து செய்வது உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரை ஊக்குவிக்க உதவலாம்.

 

Coping Emotions P3.2.png
உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்

பராமரிப்பு வழங்குவது உணர்ச்சி ரீதியாக அழுத்தம் நிறைந்ததாக இருக்கலாம். நீங்கள் போதுமான ஓய்வைப் பெறுவதை உறுதிசெய்யுங்கள், மேலும் உங்களின் சொந்த உணர்ச்சி சார்ந்த ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிங்கப்பூர் தேசியப் பக்கவாதச் சங்கம் (SNSA) அல்லது பக்கவாத ஆதரவு நிலையம் (S3) போன்ற சமூக ஆதாரவளங்களில் இருந்தும் பராமரிப்பாளர் ஆதரவு பற்றி கண்டறியலாம்.

நான் எங்கு ஆதரவு பெறலாம்?

 

சிங்கப்பூர் தேசிய பக்கவாதம் சங்கம் (SNSA) பக்கவாத நோயாளிகளுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் சமூகத்தில் மீண்டும் அவர்களை ஒன்றிணைக்க பயணங்களை ஏற்பாடு செய்கிறது. பக்கவாத நோயாளிகளுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் உணர்ச்சிசார்ந்த மற்றும் சமூகம்சார்ந்த ஆதரவை வழங்க பக்கவாத ஆதரவு குழுக்களும் உள்ளன.

வலைத்தளம்: http://www.snsasg.org.sg/                       

மின்னஞ்சல்: contact@snsa.org.sg               

நேரடித் தொலைபேசி எண்: +65 8125 1446

S3 என்பது 2015ல் நிறுவப்பட்ட சிங்கப்பூரின் முதல் - பக்க வாதத்தை முதன்மை கருத்தில் க ொண்டு இயங்கும் சமூக மறுவாழ்வு மை யம் மற்றும் ஆர ோக்கிய நிறுவனம் ஆகும் . சிங்கப்பூரில் உள்ள பக்கவாதத் தால் பாதிக்க பட்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களின் தே வை களை கருத்தில் க ொண்டு அதை நிவர்த்தி செ ய்வதே இந்நிறுவனத்தின் குறிக்க ோள் ஆகும். S3யுடன், புனர் வாழ்வின் வாயிலாக பக்கவாதத்தால் இருந்து குணம் அடை ந்தவர்களுக்கு த ொடர்ச்சியாக பராமரிப்பு கிடை ப்பது சாத்தியம் ஆகிறது. இந்த மறுவாழ்வு, மே ம்பட்ட மறுவாழ்வு த ொழில் நுட்பங்கள் மற்றும் மரபுமுறை சிகிச்சை கள் அது மட்டும் அல்லாமல் எங்களது தனித் துவமான - அறிவாற்றலை யும் சமூக உளவியல் வளர்ச்சியை யும் மனதில் க ொண்டு செ யல்படும் S3 ஆர ோக்கிய திட்டத்தின் உதவியுடன் செ யலாற்றி அதிகபட்ச மீட்பு திறன், தனித்து செ யல் படுதல், மற்றும் மறு ஒருங்கிணை ப்புக்கு வழிவகுக்கிறது.

 

S3 நிறுவனம் த ொடர்ச்சியாக கூட்டு நிறுவனங்களின் உதவியுடன், பக்க வாதத்தில் இருந்து விடு பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள்,த ொண்டர்கள்,பங்குதாரர்கள் ஒன்று சே ர்த்து பக்க வாதம் தடுப்பு குறித்த விழிப்புணர்வை நமது பரந்த சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது.

வலைத்தளம்http://www.s3.org.sg/   

மின்னஞ்சல்: info@s3.org.sg

நேரடித் தொலைபேசி எண்: +65 6473 3500 

 

Article available in English, Chinese, and Malay  

For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources

Back to Top