பக்கவாத ஆபத்து காரணிகளை கட்டுப்படுத்துதல்: புகைப்பிடிப்பு மற்றும் பக்கவாதம்
- Article last reviewed 25 May 2026
- 17 mins read
புகைப்பிடிப்பது பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது இந்த அபாயங்களைக் கணிசமாகக் குறைக்கும். புகைப்பிடிப்பது உங்களை எவ்வாறு பாதிக்கிறது, அதிலுள்ள அபாயங்கள் மற்றும் நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்த உதவும் வழிகள் ஆகியவற்றை இந்த விபரத் தாள் விளக்குகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
"நீங்கள் எவ்வளவு அதிகமாக புகைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது."நிங்கள் ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பிடித்தால், புகைப்பிடிக்காதவர்களை விட, உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு, ஆறு மடங்காக உயரும். மேலும், பக்கவாதத்திற்குப் பிறகு தொடர்ந்து புகைப்பிடித்தால் ஒரு ஆண்டுக்குள் நீங்கள் மரணமடையும் அபாயம் மூன்று மடங்காக அதிகரிக்கும் | உலகில் தடுக்கக்கூடிய மரணங்களுக்குப் புகைப்பிடிப்பதே மிக முக்கியக் காரணமாக உள்ளது.சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் சுமார் 6 பேர் புகைப்பிடித்தல் தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறக்கின்றனர். எதைத் தேர்வு செய்வது என்பது உங்கள் கைகளில் உள்ளது. |
புகைப்பிடிப்பது உங்கள் இரத்தக் கொழுப்பின் அளவை பாதிக்கிறது.புகை பிடிப்பதனால், உங்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் (HDL இரத்தக் கொழுப்பு) குறைத்து, கெட்ட கொலஸ்ட்ரால் (LDL இரத்தக் கொழுப்பு) அதிகரிக்கிறது. இதனால், மூளைக்குப் போதுமான இரத்த ஓட்டம் கிடைக்காதபோது, பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். | புகைப்பிடிப்பது உங்கள் இதயத்தை பாதிக்கிறது.புகைப்பிடிப்பது ஒழுங்கற்ற இதய தாளம் ஏற்படும் நிகழ்வைத் தூண்டலாம். இது சீரற்ற இதயத்துடிப்பு (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) எனப்படும் இதய நோய் நிலைமையாகும். இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 5 மடங்கு அதிகரிக்கிறது. |
புகைப்பிடிப்பது உங்கள் இரத்த அழுத்தத்தைப் பாதிக்கிறது.புகைப்பிடிப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது பக்கவாதத்திற்கு முக்கிய ஆபத்துக் காரணமாகும். நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டிருக்கும் புகைப்பிடிப்பவராக இருந்தால், உங்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து கணிசமாக அதிகரிக்கும். | புகைப்பிடிப்பது வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறதுபுகைப்பிடிப்பவர்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது பக்கவாதத்திற்கு பொதுவான ஆபத்து காரணமாகும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் உடலில் இன்சுலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது, இது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உங்கள் உடல், இந்த அதிகமான சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய வேண்டும் |
புகைப்பிடிப்பது பற்றிய பொதுவான கட்டுக்கதைகள்
கட்டுக்கதை #1: "சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்தால் போதுமானது."தவறு. சிகரெட் புகையில் 7,000 -க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 70 க்கும் மேற்பட்டவை புற்றுநோயுடன் தொடர்புடையவை. ஒரு சிகரெட் கூட உங்கள் நுரையீரல் மற்றும் இரத்த நாளங்களைச் சேதப்படுத்தலாம். அத்துடன் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கலாம். சிகரெட் எண்ணிக்கையைக் குறைப்பது முதல் படியாக இருக்கலாம், ஆனால் முழு ஆரோக்கியப் பலன்களைப் பெறுவதற்கு, புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் நிறுத்துவது அவசியம். | |
கட்டுக்கதை #2: "குறைவாகத் தீங்கு விளைவிக்கும் 'வடிகட்டியைக் கொண்ட' சிகரெட்டுகளையே புகைக்கிறேன்.”தவறு. வடிகட்டியைக் கொண்ட சிகரெட்டுகள் பின்வரும் காரணங்களுக்காகப் புகைப்பதால் ஏற்படும் தீங்கான விளைவுகளைக் குறைக்காது:
| |
கட்டுக்கதை #3: "எனக்கு ஏற்கனவே பக்கவாதம் ஏற்பட்டுள்ளதால், நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடத் தேவையில்லை."தவறு. பக்கவாதத்திற்குப் பிறகு தொடர்ந்து புகைப்பிடிப்பது மற்றொரு பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. | |
கட்டுக்கதை #4: “நான் மிக நீண்ட காலமாகப் புகைப்பிடித்து வருகிறேன். அதன் விளைவை மாற்றியமைத்து நலமடைவதற்கான நேரம் கடந்துவிட்டது.”தவறு. புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதில் உள்ள நன்மைகள் உடனடியாகத் தொடங்குகின்றன. 8 மணிநேரத்திற்குள், உங்கள் ஆக்ஸிஜன் அளவு மேம்படும், கார்பன் மோனாக்சைடு மற்றும் நிகோடின் அளவு பாதிக்கும் மேலாக குறையும். 2-12 வாரங்களுக்குப் பிறகு, உங்கள் சுற்றோட்டம் மேம்படுகிறது. 5-15 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுக்குப் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தானது, புகைப்பிடிக்காதவர்களின் அளவுக்குக் குறைகிறது. | |
கட்டுக்கதை #5: "நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட முயற்சி செய்தேன், ஆனால் அதில் தோல்வியுற்றேன், எனவே இனி முயற்சி செய்வதில் அர்த்தமில்லை."தவறு. உங்கள் மனதைத் தளரவிடக் கூடாது என்பதுத்தான் மிக முக்கியமான விஷயமாகும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை வெற்றிகரமாக நிறுத்தியுள்ள பலர், அப்பழக்கத்தை முற்றிலும் விடுவதற்கு முன்பு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். நினைவில் கொள்ளுங்கள், புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்குச் செய்யும் ஒவ்வொரு முயற்சியும், அப்பழக்கத்தை மீண்டும் தொடங்குவதற்கு எது தூண்டுகிறது என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகும். இதன் மூலம் எந்தெந்த பகுதிகளை மேம்படுத்துவது மற்றும் உங்கள் அடுத்த முயற்சியில் என்ன செய்வது என்பது உங்களுக்குத் தெரியும். | |
கட்டுக்கதை #6: "புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு மருந்துகள் உதவாது."தவறு. நிகோட்டின் மாற்று சிகிச்சை (NRT) — இதில் லோசன்கள் (lozenges), பேட்ச்கள் (patches), மற்றும் கம்முகள் (gums) அடங்கும் — எரிச்சல், ஆசை, பதட்டம் போன்ற அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. இதனால், நீங்கள் நிகோட்டின் அடிமைத்தன்மையை மட்டுமல்லாமல், புகைப்பிடிக்கும் பழக்கத்தையும் முறிக்க கவனம் செலுத்த முடியும். NRT-ஐ ஆலோசனை உதவியுடன் சேர்த்து பயன்படுத்தினால், புகைப்பிடிப்பை வெற்றிகரமாக நிறுத்தும் வாய்ப்பு இருமடங்கு அதிகமாகும். |
புகைப்பிடிப்பதை நிறுத்த உதவுவதற்கான உதவிக்குறிப்புகள்
| புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கான உங்கள் தனிப்பட்ட காரணங்களை எழுதுங்கள். அவற்றின் பட்டியலைத் தயாரித்து, உங்களை நீங்களே ஊக்குவிக்க நினைவூட்டுவதற்கு அதைப் படியுங்கள். | |
| புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான உங்கள் திட்டத்தை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இதனால் அவர்கள் உங்களுக்கு ஆதரவளிக்க முடியும். இது நீங்கள் தொடர்ந்து ஊக்கத்துடன் இருக்க உங்களுக்கு உதவும். | |
| புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கு ஒரு தேதியை அமைத்து அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். | |
நிகோடின் இல்லாத வாழ்க்கைக்கு உங்கள் உடல் பழகிக்கொள்ளும்போது, விலகல் அறிகுறிகள் இயல்பானவை மற்றும் தற்காலிகமானவை. பொதுவாக காணப்படும் அறிகுறிகள் இவை: • தொடர்ச்சியான ஏக்கம் - 4 D-களை முயற்சிக்கவும்: - உங்கள் கவனத்தைத் திசை திருப்புங்கள் • சோர்வு: ஆரோக்கியமான தூக்கப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள். உங்கள் உடல் சக்தியை அதிகரிக்க, குறைந்த அளவில் உணவைத் தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள். | |
| உங்கள் சுகாதாரப் பராமரிப்பு நிபுனர்கள் அல்லது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கான ஆலோசகர்களிடமிருந்து உதவியும் ஆதரவையும் பெறுங்கள். அல்லது மேலும் உதவிக்கு நீங்கள் 1800 438 2000 என்ற எண்ணில் க்விட்லைனையும் அழைக்கலாம். | |
| நேர்மறையான எண்ணத்துடன் இருங்கள், உங்களால் முடியும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். |
பயனுள்ள தொடர்புகள்
சுகாதார மேம்பாட்டு வாரியம் | “QuitLine” உதவித் தொலைபேசி தொலைபேசி: 1800 438 2000 |
“ஐ குவிட் 28-டே கவுண்ட்டவுன் (I Quit 28-Day Countdown)” திட்டம் வலைத்தளம்: https://www.healthhub.sg/programmes/88/IQuit
|
For more information on how to better manage your stroke recovery journey, visit Stroke E-Resources.
Related Topics
Explore some of these related topics